இலட்சங்களையும்,கோடிகளையும் வைத்து மதிப்பிடும் நடிகர்களுக்கு நடுவில் இலட்சிய நடிகராக வாழ்ந்தவர்
எஸ் எஸ் ஆர்.
கணீர் என்று ஒலித்த குரல்கள் இரண்டு,ஒன்று
எஸ் எஸ் ஆர் மற்றொருவர் ஓ ஏ கே தேவர்.
எஸ் எஸ் ஆர் முரடராக எப்போதும் தோன்றியதில்லை,அவரின் மணிமகுடம் பார்க்க வேண்டிய படம்,கேட்க வேண்டிய வசனங்கள்.
பிச்சைக்காரர்கள் மாநாடு நடத்துவதற்காக பராசக்தியில் பிச்சை கேட்பார்:என்னம்மா,நாங்கள் மாநாடு நடத்தக்கூடாதா? யார் கண்டது பிச்சைக்காரனே நாளைக்கு மந்திரியாக வருவான் என்று நடித்தவர் மறைந்து விட்டார்.
கோலாலம்பூரில் முக்குலத்தோர் பத்தாவது மாநாட்டிற்கு 2008 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்த நாள்கள் நினைவிற்கு வருகிறது.இலட்சிய நடிகரை பற்றிய குறும்படம் அவரின் நெறி காட்டலில் எடுத்தோம்,மலேசியாவிற்கு அவரை குடும்பத்தோடு அனுப்பி வைத்து பெருமைப்படுத்தினோம்.86 வயது அவர் வாழ்ந்தது பெரிது,அரிது.
சிலப்பதிகாரம் படித்திருக்கிறோம்,மாசறு பொன்னே என்ற மணிக்குரலில் பாடிய படி கோவலன் நடக்கின்ற கோமகன் நடை வேறு எவருக்கு வரும்.கட்டபொம்மன் கட்டை மீசை வைத்தவன்,கோவலனோ கொள்கை தடுமாறும் கலைஞன்,வேறு எவருக்கும் இந்த வேடம் பொருந்தவில்லை.
கடைசி வரை தன்னுடைய இல்லத்திலேயே-(அண்ணா இல்லம்) குடியிருந்தார்.நம் உள்ளங்களிலும் குடியிருப்பார்.

Add a Comment