ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)
(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்) …
…
உங்களுடைய துணைவியார் மற்றும் குடும்பத்தினர் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்.
என்னுடைய துணைவியாரைப் பற்றி நான் மகிழ்ச்சியோடு சொல்லவேண்டும். நான் விரும்பிய பெண்ணையே மணந்து கொண்டவன். எங்கள் திருமணம் காதல் மணம் என்று சொன்னாலும்கூட குறையில்லை. காரணம், ஒரு வழியில் சுற்றி வந்தால் அத்தை மகளை நான் மணந்திருக்கிறேன் என்கிற மகிழ்ச்சி. என்னைவிடக் கல்வித் திறனும், அறிவாற்றலும் நிரம்பிய துணைவியார் என்பது எனக்குப் பெருமிதம். எனக்குத் தமிழ்தான் தெரியும். என் மனைவிக்கு எது தெரியாது என்று சொல்லமுடியாது. நான் ஒருமுறை சொன்னேன், என் மனைவி ஒரு முறை விமானத்தை உற்றுப்பார்த்தால், அடுத்தமுறை விமானத்தையே செலுத்துகிற திறம் பெற்றுவிடுவார்கள். அவர்கள் தொட்ட துறை எதுவும் துலங்காமல் இருந்ததில்லை. குழந்தை மருத்துவத்தில் புகழ்பெற்றுத் திகழ்ந்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் முதல்வராகவே திகழ்ந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

Add a Comment