ராஜ் டி.வி. வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி
Mile Stones (Achiever’s Story)
(சொல்வேந்தர் அறிஞர் முனைவர் ஔவை நடராசன் அவர்களுடன் நேர்முகம்
நண்பர்களே! நெஞ்சைவிட்டு அகலாத தஞ்சையிலிருந்து திரும்பியதும், நாடுகளுக்கு அங்கங்கே சென்று, வழக்கமாக வாய்திறந்தால் பேசுவதே வழக்கம் என்ற வகையில் மேடை வாழ்க்கையே போதும் என்றிருந்தேன். எனக்கு ஒரு பெரிய குறை இருக்கிறது. என்னால் மூன்று பக்கம் எழுத முடியாது. என் விரலால் எழுதவே முடியாது. அது எப்படியோ நான் வளர்த்துக்கொண்ட நோய் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் பேசுகிற அளவிற்கு என்னால் எழுத முடியாமல் போயிற்று. என்னுடைய தந்தையார், விரல்நோக ஒரு நாளைக்கு நூறு பக்கங்கள் எழுதுவார். ஒருவேளை தந்தையார் எழுதியதைப் பார்த்துப்பார்த்துதான், ஒருவேளை மகனுக்குச் சலிப்பு வந்ததோ என்னவோ? என்னால் எழுத முடியவில்லை. ஒரு நூல் எழுதுவதற்குள் அப்பா….. எனக்கு உயிரே போய்விடும் என்ற அளவிற்கு இருந்தேன். அது ஒரு பெரிய குறை எனக்கு.

Add a Comment