பேராசிரியர் வேங்கடராமன் வாழ்வும் தொண்டும்-2
பத்மஸ்ரீ ஒளவை நடராசன்
அறிஞர் பெருமக்களே!
நண்பர்களே…
நான் அடிக்கடி சொல்வதுண்டு, இது ஒரு இடைப்பிரவரலாகச் சொல்லவேண்டும். பேராசிரியர் விஜயலெட்சமி அவர்கள், என்னை அடிக்கடி காணவருவார்கள். நான் எப்போதும், சொல்வதுண்டு. என்னுடைய துணைவியாரிடத்தில், உ.வே.சா. அவர்களை மகாவித்வான் ஒருமுறை அழைத்துக்கொண்டு போனாராம். இன்றைக்கு நாம் மடத்திற்குப் போகலாம். அங்கே நெய் கிடைக்கும் என்று சொன்னாராம். உணவுக்கு நெய்கிடைப்பது திருமடத்தில்தான் கிடைக்கும் என்று சொன்னாராம். அதுபோல நான் எப்போதும் சொல்வதுண்டு. விஜயலெட்சுமி இன்று வருகிறார்கள் என்றால் நல்ல உணவு கொஞ்சம் கிடைக்கும் என்று நான் மகிழ்ச்சியாகச் சொல்வேன். அப்படி அவர்கள் வெறுங்கையாக வருவதே இல்லை. வந்தாலும் கூட அவர்கள் யாரும் எண்ணிப்பார்க்காத அளவிற்குத்தான் நூல்களின் கருத்துகளையெல்லாம் நுழைந்து காண்கின்ற பழக்கம் இருக்கிறது. ஒருமுறை கேட்டார்கள். இலக்கணக்குறிப்புகளையும் கூட யாரும் எண்ணிப்பார்க்காத அளவிற்கு நுழைந்து பார்த்துக்கேட்கிற பழக்கத்தைத் தொல்காப்பியம் தொடங்கி, தமிழ்விடுதூது வரையில், அனைத்து நூல்களையும் அப்படிக் கற்றுத்தந்திருக்கிறார்கள். பொதுவாகத் தமிழாசிரியர்கள், தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பினால் அல்லது தன் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியால், ஏமாற்றத்தால், பிள்ளைகள் அந்தக் கல்வி கற்க வேண்டா என்றே நினைப்பார்கள். நீங்கள் அதை எண்ணிப்பார்க்கலாம். பெரும்பேராசிரியர்களுடைய மக்கட்செல்வங்கள் கூட யாரும் தமிழ்கற்கச் சென்றதே இல்லை.
உன் தலைவிதியும் தமிழ் படிக்கவா வந்தது என்று என்னைப்பார்த்து மு.வ. கேட்ட காலம் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் வெங்கட்ராமன் அவர்கள், தாம் கற்ற தமிழ்க்கல்வியை என்றைக்குமே எள்ளி நகையாடியது இல்லை.எளிய பதவுரையை எல்லோரும் கண்டு நயந்து மகிழத்தக்க அளவுக்கு, நற்றிணை உரையெழுதி வழங்கிய பெருமை. அந்த வகையில் அவர் உரைவேந்தராகத் திகழ்கிறார் என்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் அவருக்கு வாய்ப்பு இருந்திருக்கமானால், அகநானூற்று பதிப்பையும் அவர் கொண்டுவரவேண்டும் என்றுதான் கருதியிருந்தார்.
நீங்கள் இன்னும் பார்க்கலாம். சங்க காலப் புலவர்களின் பெயர்களையெல்லாம் தொகுத்து, சங்ககாலப் புலவர்கள் என்ற ஒரு அரிய நூல் எழுதியிருக்கிறார்கள். இன்றைக்குங்கூட அவர் தன்னுடைய இல்லத்திலிருந்து கொண்டுவருகின்ற நூல்களிலேயெல்லாம், திருக்குறளின் ஓரமெல்லாம் குறிப்புகளை எழுதிக்காட்டியிருக்கிறார்.

Add a Comment