POST: 2014-11-12T19:49:22+05:30

வள்ளல் பெருமான் வரலாறு இளம்பருவத்தில் சென்னை மாநகரில் தொடங்கி பிறகு பிள்ளைக்கு ஏற்பட்ட தில்லைக்காதல் பெருங்காதலாக மாறி பிறகு தில்லையிலிருந்து வடலூர் திருத்தலம் சென்று, பிறகு சித்திவாளாகத்தில் அவர் நம் கண்காணாத தோற்றத்தைப் பெற்றார்.

வள்ளலார், தானே மூன்று நிறுவனங்களை உருவாக்கியிருக்கிறார். சாலை, சங்கம், சபை என்று பெயரிட்டு வாழ்க்கையில் இந்த மூன்று நிறுவனங்கள்தான் ஒருவரை அருள் வாழ்விற்குச் செம்மையாக்கும் என்ற வகையில், வயிற்றுப்பசிக்குச் சாலை என்றும்,
அறிவுப்பசிக்குச் சங்கம் என்றும்,
உயிரின் உள்ளொளியை மேலும் வளப்படுத்திக்கொள்வதற்கு சபை என்றும் மூன்றாக அமைத்திருக்கிறார்கள்.

-பத்மஸ்ரீ ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *