வள்ளல் பெருமான் வாழ்க்கையை என் அருமை நண்பர், இளமையிலேயே சமயத்துறையிலும் ஆர்வம்கொண்டு தான் பெற்ற பெருவளத்தையெல்லாம் சமயப்பணிக்கு ஆட்படுத்த வேண்டும் என்று வாழ்கின்ற மோகன் அவர்களின் முயற்சியும், முறையாகவும், நெறியாகவும் கலைத்துறையில் பழுத்து முதிர்ந்த பாராட்டத்தக்க பெருங்குடும்பம் என்று தமிழகம் புகழ்கின்ற வகையில் விளங்குகின்ற, இயக்குநர் ரமணன் அவர்கள் உடன் இருந்து இந்தப்பணியை நிறைவேற்றுவதும் நமக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. அருளாளர்கள் வரிசையில் வள்ளலாரை இன்று வழங்குவதைத் தமிழகம் இருகை நீட்டி வரவேற்று மகிழும்.
-பத்மஸ்ரீ ஒளவை நடராசன்

Add a Comment