பத்மஸ்ரீ ஒளவை நடராசன்
இலக்கியச் சிந்தனை பரிசு வழங்கும் விழா-
கவியரசு வைரமுத்து அவர்கள், எழுத்தைத் தன்னுடைய ஒரு சிந்தனை செயற்பாடாக மாணவப் பருவத்திலிருந்து எழுதி வருகிறார். எழுதுவதெல்லாம் ஒரு மன உறுதிக்காகவும், மக்களுக்குத் தரும் செய்தியாகவும் தான் எழுதவேண்டும் என்பது ஒரு குறிக்கோளாகும்.
Remember I write to the purpose என்று தான் சொல்வார்கள். நான் எழுதாமால் ஏன் இருக்கிறேன் என்று கேட்டால், there is no purpose to write என்று சொல்வார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், கவிதையாக எழுதினாலும், கட்டுரையாக எழுதினாலும், மேடைகளில் கருத்துரையாக எடுத்துச்சொன்னாலும் கூட கற்பனை வேண்டுமென்றால் அங்கங்கு தலைகாட்டுமே தவிர, கடமை உணர்ச்சியும், சமுதாயத்தின் மறுமலர்ச்சியும்தான் தன்னுடைய உள்ளுணர்ச்சியாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற கவிப்பேரரசை நாம் பெற்றிருப்பது நமக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருவதாகும்.

Add a Comment