POST: 2014-11-17T11:07:51+05:30

பத்மஸ்ரீ ஒளவை நடராசன்

இலக்கியச் சிந்தனை பரிசு வழங்கும் விழா-2

நானும் ஆயிரம் நூல்களைப் படித்திருக்கிறேன். மூன்றாம் உலகப்போர் எட்டு மாதங்களில் ஒன்பது பதிப்புகளை எட்டியிருக்கிறது என்றால், இனி எழுத்துலகம் எட்டாத உயரும். காரணம் மூன்றாம் உலகப்போர் என்பது, எனக்குக் கதையாகத் தெரியவில்லை. ஒரு சதை கிழிந்து போனால் கொட்டுகின்ற உதிரமாகத் தெரிகிறது. ஏழைகளினுடைய வாட்டம் தெரிகிறது.

தமிழ்நாட்டில் காலங்காலமாக, உழவுத்தொழில் தான் உயிர்த்தொழில் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த உழவுத்தொழில் ஒரு பயன்பாட்டுக்கும் இல்லாமல், காணும் இடங்களிலெல்லாம் காரைக் கட்டடங்கள் எழுந்து நின்று, நிலத்தை விற்கிறவர்கள் பெருகிப்போய் உழவு என்பது இப்படி வற்றிப்போவதைக் காண்கிறபோது, இதற்காக ஒரு நாவல் எழுத வேண்டும் என்று தன்னுடைய வாழ்க்கையை அப்படியே பின்னிக்காட்டுகிறார்.

இந்த நெடுங்கதையில் ஒரு புதுமையிருக்கிறது. இளங்கோவடிகள்தான் சிலப்பதிகாரத்தில் கடைசி இடத்தில் நானும் வந்துபோகிறேன் என்ற எழுதியிருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்துவே இந்தக் கதையில் ஒரு பாத்திரமாக வருகிறார். அட்டப்பெட்டியில் இருக்கிறவர்கள் எல்லாம் படுகிற அல்லல்களைச் சொல்கிற நேரத்தில் கவிஞர் தன் கண்ணீர் வடித்து எழுதுகின்ற இந்தச்சொற்கள், அது சொற்கள் அல்ல. நான் இயல்பாகச் சொல்வது, வைரமுத்து எழுதுவது வைரக்கற்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *