பத்மஸ்ரீ ஒளவை நடராசன்
இலக்கியச் சிந்தனை பரிசு வழங்கும் விழா-3
இந்த நூலுக்குப் பரிசு தருகின்ற நிறுவனம் எத்தகையது என்பது பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். எனக்குத் தெரிந்து ஆரவாரம் இல்லாமல் ஆழமான நூல்களுக்குத்தான் பரிசு தருவது என்பதற்காக, ஒரு ஐம்பது, அறுபது பேரை படிக்க வைத்து, அதன் மதிப்பெண்களை வைத்து மதிப்பது என்கிற வழக்கத்தில் எனக்குத் தெரியும்.
ஜெயகாந்தன் பரிசு பெற்றதும், நா. பார்த்தசாரதி பரிசு பெற்றதும், இலட்சுமணன் அவர்களும் அவருடைய இளவல் இப்போது நாடாளுகின்ற நிதியமைச்சராக இருக்கின்ற சிதம்பரம் அவர்களும், இரண்டுபேரும் எந்தவிதமான பகட்டும் இல்லாமல் ஒரு எளிய இடத்தில் இலக்கியச் சிந்தனை நிறுவனத்தை நடத்தி, தகுதியால், திறமையால், ஆற்றலால், அழுத்தத்தால், பொருளால் பரிசு தருவது என்று இந்தப் பரிசைப் பெற்றிருக்கிறீர்கள்.
கவியரசு அவர்களே, இந்தப்பரிசு ஒரு பெரிய பரிசு அல்ல. நீங்கள் பரிசுகளிலும் பதக்கங்களிலும் மிதக்கிறவர் என்பது நாடு நன்றாகத் தெரியும். என்றாலும்கூட இலக்கியச் சிந்தனை தருகிற இந்தப்பரிசு என்பது, இலக்கியமும் சிந்தனையும் கலந்திருக்கிற நூலுக்குத்தான் பரிசு தருகிறது என்று சுட்டிக்காட்டுவதானால், மூன்றாம் உலகப்போர், இலக்கியம் அதே நேரத்தில் ஒரு சிந்தனையினுடைய சுரங்கம்.

Add a Comment