POST: 2014-11-19T21:03:11+05:30

பத்மஸ்ரீ ஒளவை நடராசன்

இலக்கியச் சிந்தனை பரிசு வழங்கும் விழா-4

சிந்தனையாலும், எழுத்துச்சீர்த்தியாலும், உங்கள் உணர்ச்சியினாலும், மனம் துடிதுடித்து எழுதிய இந்தக் காப்பியத்தைத் தமிழுலகம் இருகை நீட்டி வரவேற்றதை, நான்

இந்த நூல் கண்காட்சியின்போது நுழைந்தபோது பார்த்திருக்கிறேன். எல்லோர் கையிலும் மூன்றாம் உலகப்போரை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்கள் வாங்குவதும், அது இன்னும் சில திங்களுக்குள் பத்தாம் பதிப்பைக் காணப்போகிறது என்றால், நானே நினைத்ததுண்டு, இதை ஆங்கிலத்தில் எழுதிக்காட்டியிருந்தால், அனைத்து உலகமும் இந்திய நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்த இடற்பாட்டைப் பற்றிக் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்பார்கள். பல பேருக்கு இன்னும் அந்தக்காட்சி சரியாகத் தெரியவில்லை.

ஒரு உழவன் தற்கொலை செய்து கொள்ளுகிறான் என்பது, ஒரு நாட்டினுடைய எதிர்காலம் ஆபத்தில் இருக்கிறது என்பதைக் காட்டுகின்ற கேள்விக்குறி என்பதைப் பல நாடுகள் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை.

சுற்றுப்புறச்சூழல், மாசுகெடுவது, மக்கள் பிறப்பெடுப்பது, நகர வாழ்க்கைக்குள்ளே அகப்பட வேண்டுமென்பதற்காகத் தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்வது, என்பது போன்ற செயல்களை, நான் ஒரு வேளை தி பேல்டர்ஸ் பர்க் என்பவர் சீன நாடு பற்றி அந்தநாளில் கிடைத்த தகவல்களை, உலகப்பரிசு பெற்ற தி குடியர்ஸ் என்ற நாவலைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன். அப்படி வைரமுத்து அவர்களுக்கு, உலகப்புகழ் பெற்றுத் தருகிற உன்னத காப்பியத்திற்கு, இலக்கியச் சிந்தனை பரிசு பெறுவது நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

உரிய பரிசை,
உரியவருக்கு,
உரிய வகையில்,
உரியவர்கள் தருகிறார்கள்.

எழுதிஎழுதி விரல்கள் தேய்ந்து கொண்டிருக்கும் இராமகிருஷ்ணன் பாராட்டுகிறார் என்றால், எழுத்துலகம் பாரட்டுகிறது என்பது பொருள். தமிழுக்கு ஒரு தனி மகுடம் கிடைத்திருக்கிறது.

மகிழ்ச்சி
வணக்கம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *