காலத்தால் பழமையும் சிறப்பியல்புகளும் கொண்ட மொழிகளைச் செம்மொழிகள் என்பர். அந்த வகையில் உயர்தனிச் செம்மொழியாகிய தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கப் பல்வேறு கடிதங்களும் போராட்டங்களும் நடத்தி செம்மொழித் தகுதிப்பாடு 2004-இல் கிடைத்தது.
அதுபோலவே சமஸ்கிருதம் – 2005
, தெலுங்கு -2008,
கன்னடம் -2008,
மலையாளம் – 2013,
ஒரியா – 2014
ஆகிய மொழிகளும் செம்மொழித் தகுதி பெற்றுள்ளன என்பதை அறிய முடிகிறது.
எனவே மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் போல மத்திய செம்மொழி சமஸ்கிருத ஆய்வு நிறுவனம்,
மத்திய செம்மொழித் தெலுங்கு ஆய்வு நிறுவனம்,
மத்திய செம்மொழி கன்னட ஆய்வு நிறுவனம்,
மத்திய செம்மொழி மலையாள ஆய்வு நிறுவனம்,
மத்திய செம்மொழி ஒரியா ஆய்வு நிறுவனம்
அமைந்திருக்க வேண்டும்.
சட்ட விதிகளின்படி அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர் நிறுவனத் தலைவராகவும் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஓர் அறிஞர் துணைத்தலைவராகவும் அமைந்திருக்க வேண்டுமே? இதுவரையில் மத்திய அரசின் கல்வித்துணை இணை அமைச்சர் துணைத்தலைவராக இருந்து வந்தார். இப்போதுதான் மாநில அளவில் ஓர் மூதறிஞர் என்ற வகையில் ஔவை நடராசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுபோல் பிற மாநிலங்களில் அமைப்புக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவில்லை. அப்படியே செயற்பட்டாலும் என்ன பெயரில் அவைகள் அழைக்கப்படுகின்றன. அதிகார அமைப்பு எவ்வாறு அமைந்திருக்கிறது என்ற விவரங்கள் எவருக்கும் தெரியவில்லை. அந்தந்த மொழிகளுக்கு என தனி சட்ட விதித்தொகுப்பு உண்டா? இந்த குழப்பத்தை யார் தீர்த்து வைப்பது.
இதை தெரிந்து கொள்ளாமலேயே பத்தாண்டுகள் முடிந்திருக்கின்றன.

Add a Comment