POST: 2014-12-22T10:06:05+05:30

தமிழர் பண்பாடு அருமையானது; அரிதானது. அனைவரும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளது. நமது இலக்கியங்களும் கலைகளும் எடுத்தியம்பும் அரிய பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டது. தமிழர் இனம் உலகின் தனித்துவம் பெற்ற இனம் என்பதற்கு அவர்கள் உலக மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய உயர்வான வாழ்வியல் உண்மைகளையும் கருத்துக்களையும் தங்களின் வாழ்வோடு ஒன்றியதாகச் செயற்படுத்தியப் பாங்கை ஆராயும்போது அறிய முடிகிறது. மறுமையை ஏற்றுக் கொண்ட நிலையிலும் இம்மை வாழ்வே சிறந்த வாழ்வு எனத் தமிழர் கருதினர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *