POST: 2014-12-22T10:06:35+05:30

நிலத்தைப் பண்படுத்தி விளைச்சல் மிக்கதாக செய்வது போல் மனத்தைப் பண்படுத்தி நல்வாழ்க்கைக்கு வழிகோலுவதே பண்பாடு. உலகத்தோடு ஒட்டி ஒழுகல் என்பதை கண்டறிந்தவர் தமிழர். சங்கப் புலவர்கள் பலர் உலக நடைமுறைக்கு ஏற்றாற்போல் ஒத்து நடப்பதே பண்பாடு எனக் கருதினர் கலித்தொகை இதனை ”பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்” என எடுத்தியம்பும். உலக நடைமுறைகளையும் சமூகம் ஏற்றுக்கொண்ட நெறிகளையும் ஏற்று நடத்தலே பெருமை மிகு பண்பாடு எனத் தமிழர் கருதினர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *