POST: 2014-12-25T20:37:34+05:30

கண்களை நீ மூடிக்கொண்டாய்!

மாணவப்பருவத்திலிருந்து எண்பத்தி நான்கு ஆண்டு முடியும் வரை ஒவ்வொரு கணமும் நாடகச்சித்திரங்களையே ததும்ப நினைத்தவர் கே.பாலச்சந்தர்.இயக்குநர் சிகரம்-படித்தவர்களுக்கு சிக்கல்களை சித்தரித்துக்காட்டும் சிந்தனையாளர்.

ஊர் முழுவதும் திருக்குறளை பேசிக்கொண்டிருந்த காலநிலையில் தன்னுடைய திரைப்படங்களில் திருவள்ளுவரைத்தான் முதல் காட்சியாகக்காட்டுவார்.

மூன்றெழுத்து,ஐந்தெழுத்து,ஏழு எழுத்து என்று தலையெழுத்தை நம்பி தலை கவிழ்ந்தவர்களுக்கு நடுவில் நீர்க்குமிழி என்ற படம் எடுத்தவர் அவர் ஒருவர் தான்.

வாடகைத்தாய் என்ற புதிய மேற்குலகப்போக்கை எடுத்துக்காட்டியவர் கே பாலச்சந்தர் தான்.

தண்ணீர் தண்ணீர் என்ற படத்தின் ஒரு கருவை வைத்துத்தான் இன்றும் கத்தி கத்தித்தான் லிங்காவை எடுத்தார்கள்.

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறான்
என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிக்கு ஊக்கம் தந்தவர் இயக்குநர் சிகரம் தான்.

கே பாலச்சந்தர் தன் வீட்டில் ஒரு விருந்து வைத்தால் பத்துப்பேர் அழைப்பதில் ஔவை நடராசன் ஒருவர் இருப்பார் என்று எழுதினார்.

நாடகயுலகம்,படவுலகம்,சின்னத்திரையுலகம் என்ற மூன்று உலகத்திலும் உலா வந்தவர்.

ஒரு புதுமை என்னவென்றால் வாகீச கலாநிதி கி வா ஜா தன் மகனுக்கு முருகன் என்று பெயர் வைத்தது,கே.பிக்கு தன்னுடைய மருகனுக்கு கந்தசாமி என்ற பெயர் அமைந்தது.

கடைசிப்படத்திலும் கூட டைரக்டர் ஆக நடித்திருக்கிறார்.

கனிந்த பருவத்தில் அவர் உயிர் நீத்தார் என்று சொல்ல வேண்டுமே தவிர முதிய வயது என்றால் நூறாண்டு கண்ட வீ ஆர் கிருஷ்ணா ஐயர் யும் 95 ஆண்டு கண்ட தந்தை பெரியார்,மூதறிஞர் ராஜாஜியையும் என்ன சொல்வது??

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *