மின்சாரம் பெருகுவதால் குவியும் கழிவுகள்,பாழாகும் ஆறுகள்,வீசுகிற காற்றுக்கூட அருகிலுள்ள தொழில் சாலைகளின் வெடிமருந்து புகையினால் சீரழிதல்.ஓடுகிற உந்துகள் உதிர்க்கின்ற கரி வளிகளால் வானமே கிழிந்து விடுகிற வாய்ப்பு ஏற்படுதல்.பயிர்கள் சீர் கெடுதல் இவைகளைப்பற்றியெல்லாம் இப்போது கலைக்களஞ்சியம் வந்துள்ளது.சுற்றுச்சூழல் மாசுபடாத நிலையே இப்போதில்லை.
ஆளுக்கு ஒரு மரம்,நாளைக்கு ஒரு முறை நடுகிற திட்டம் வளருமானால் பசுமை எங்கும் படரும்.தெருச்சாலைகளில் கூட மரங்கள் அடர்ந்த சாலைகளைத்தான் நிழற்சாலை(Avenue) என்பார்கள்.
இயற்க்கையை பரிவோடு உயர்த்தி வாழும் வாழ்வு தான் செம்மாந்த வாழ்வு.

Add a Comment