தினத்தந்தி 28.12.2014-பக்கம் 2
அவ்வை நடராஜன்,பாலன் ஆகியோருக்கு தினத்தந்தி இலக்கிய பரிசு
ரூ 5 லட்சம் வழங்கப்பட்டது
அவ்வை நடராஜன்,ஜி.பாலன் ஆகியோருக்கு தினத்தந்தி இலக்கிய பரிசு ரூ 5 லட்சம் நேற்று வழங்கப்பட்டது.
இலக்கிய பரிசு
தினத்தந்தி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவாக,ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை யொட்டி,இலக்கியப்பரிசு வழங்கப்படுகிறது.இதன்படி,மூத்த தமிழறிஞருக்கு ரூ.1.5 லட்சமும்,சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டு வந்தது.
அது கடந்த ஆண்டு முதல் மூத்த தமிழறிஞருக்கு ரூ.3 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு, .சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருதுக்கு முனைவர் அவ்வை நடராஜனும், சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசுக்கு விடுதலை இயக்கத்தில் தமிழகம் என்ற நூலை எழுதிய முனைவர் ஜி .பாலனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ரூ 5 லட்சம் வழங்கப்பட்டது
.
இந்த ஆண்டுக்கான இலக்கிய பரிசளிப்பு விழாவும், சி.பா.ஆதித்தனாரின் 110-வது பிறந்தநாள் விழாவும்,கடந்த செப்டம்பர் 27- ந் தேதி ராணி சீதை மன்றத்தில் நடைபெறுவதாக இருந்தது.ஆனால்,தவிர்க்க முடியாத காரணங்களால் விழா ரத்து செய்யப்பட்டது.இந்த நிலையில்,முனைவர் அவ்வை நடராஜன்,முனைவர் ஜி.பாலன் ஆகியோருக்கு அவர்களது இல்லங்களுக்கே சென்று நேற்று சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டது.
முனைவர் அவ்வை நடராஜனுக்கு தினத்தந்தி தலைமை பொது மேலாளர்(நிர்வாகம் ) ஆர் .சந்திரன்,விருதுக்கான கேடயத்தையும்,ரூ.3 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியின் போது தினத்தந்தி செய்தி ஆலோசகர் ஐ.சண்முகநாதன்,செய்தி ஆசிரியர் எம்.தனசேகரன்,தலைமை செய்தியாளர் டி.இ.ஆர்.சுகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்

Add a Comment