POST: 2014-01-20T12:31:14+05:30

பூசம் என்பது தூய்மையான ஒளியென்றும் பொருள் தரும்.பூசத்தின் போது தெப்பவிழா நடைபெறும். புறந்தூய்மை நீரான் அமையும் என்பது குறள். எப்போதும் என் கைகளாலும்,கால்களாலும் தன்னை துடைத்துக்கொண்டு தூய்மையாக இருப்பது பூசை. பூசை தான் பின்னர் பூனையாயிற்று.

POST: 2014-01-19T21:29:55+05:30

இளம்பிள்ளை வாதம் எலும்புகளை வளைத்து முடமாக்கும் கொடிய நோயாகும்.குழந்தைகள் இரையாகி வாழ்வு முழுவதும் ஒடுங்கி இருந்து நாற்பதாண்டுகளுக்குள் உலர்வதைக் காண்கின்றோம்.போலியோ இல்லாத உலகம் கனவாக இருந்து இப்போது நினைவாகி உள்ளது. எங்கள் குடும்பத்திலேயே எங்கள் அத்தை ...

POST: 2014-01-18T09:46:12+05:30

கல்வி என்பது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உன்னதம் ஆகிய நான்கு கூறுகளையும் உள்ளடக்கியதாகும்..

POST: 2014-01-17T09:11:34+05:30

ஆயிரம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று உரைத்த காலத்துக்கு ஈடாக பள்ளி சென்று படிப்பதே பாரினில் நன்று என்று எல்லோரும் போற்றும் வாசகம் அமைகிறது.

POST: 2014-01-11T23:44:41+05:30

After 37 Years,met my Second class to Fifth class Valliammal School Classmates(1974-1977) this evening for a get together dinner and was quick in recollecting quite a lot and it was bundle of joy and enthusiasm.3 Cheers to all who hd made it today...

POST: 2014-01-11T07:42:43+05:30

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கில அரசு கல்கத்தா, பம்பாய், சென்னை மாநகரங்களில் முதல் பல்கலைக்கழகங்களை உருவாக்கினர். அந்த வளர்ச்சியால் அரசோடு இணைந்து தனியாரும் தங்கள் உடைமைகளையெல்லாம் வழங்கி தாங்கள் வைத்திருந்த நிலபுலங்களை முதலீடாகக் கொண்டு பள்ளிகளையு ...

POST: 2014-01-10T16:07:44+05:30

கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று தமிழ்நாட்டை நினைக்கும்பொழுதே பாரதியார் தமிழ் நாட்டினுடைய கல்வி வளர்ச்சியைப் பற்றிய பெருமிதம் பொங்கிடப் பாடி மகிழ்கிறார்.

POST: 2014-01-08T22:37:10+05:30

கல்வியை அழியாத செல்வம் என்றும் அன்றாடம் வளர்கிற கலைத்திறம் என்றும் கருதும் வகையில் கேடில் விழுச்செல்வம் கல்வி என்று திருக்குறள் சுட்டிக்காட்டுகிறது.

POST: 2014-01-07T21:00:34+05:30

இயந்திர மொழிபெயர்ப்பு (Machine Translation – MT) - முனைவர் அருள் நடராசன் - இயக்குநர்-மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு கருத்து, எழுத்து, நடை, சூழல் முதலியவற்றை பெயர்த்து வழங்குவதனால் முழ உரிமை எடுத்துக்கொள்ள முடியாத ...