பாய்ந்தது பதினாறடி ! அறிஞர் ஔவை நடராசன் (முன்னாள் துணைவேந்தர்) பல்கலை ஆர்வத்தாலும் தளராத முயற்சியாலும் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ்வாணன் அவர்களை நான் அண்ணா நகருக்குக் குடிவந்த 1975-ஆம் ஆண்டிலிருந்தே அறிவேன். கலகலவென்று சிரித்தபடி, கனிவோடு தோள்தொட்டு உறவா ...
POST: 2014-02-15T23:34:30+05:30
கருத்துக் களஞ்சியமாக விளங்கும் ஈரடியும், நாலடியும் பொருளாகக் கொடுத்த தமிழ்த்தாயின் சீரடியைப் போற்றுவதோடு மாணவர்கள் ஈரடி, நாலடியில் ஓரடியேனும் படித்து வாழ்க்கையில் அவற்றில் கூறப்படும் அற நெறிகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
POST: 2014-02-15T22:26:35+05:30
தமிழில் மின் புத்தகங்களின் வளர்ச்சி என்ற தலைப்பில் இன்று காலை அமெரிக்க வாழ் தமிழர் திருமூர்த்தி ரங்கநாதன் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உரையாற்றினார்,அவரை மேடையில் நான் அறிமுகம் செய்து பேசினேன்
POST: 2014-02-07T13:35:08+05:30
திருக்குறள், நாலடியார் இரண்டுமே டாக்டர் ஜி.யூ.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.
POST: 2014-02-06T06:53:21+05:30
ஈரடி -திருக்குறள், நாலடி - நாலடியார். சிலம்பாடும்போது “ஈரடி, நாலடிக் கற்றவரிடம் ஓரடித் தள்ளி நில்“ என்று கூறும் வழக்கு உள்ளது. “ஆலும், வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி“ என்றும், பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என்றும் கூறுவர். ...
POST: 2014-02-05T08:03:03+05:30
திருக்குறளுக்கு அறம் என்றே ஒரு பெயர் உண்டு. புறநானூறு, ‘அறம் பாடிற்றே, ஆயிழை கணவ‘ என்று கூறி நன்றியறிதலை நினைவூட்டுகிறது.
POST: 2014-02-04T07:36:17+05:30
அமெரிக்காவின் இரட்டை முகம்-இருட்டு முகம் இரண்டு முகங்கள்,இழிவு முகங்கள் அந்த வானூர்தி அமெரிக்காவிலிருந்து பறந்தது,கராச்சிக்குப் போய் சேர்ந்த போது இலிபியா நாட்டு வன்முறையாளர்கள் விமானத்தை கடத்திச்சுட்டனர். அங்கே இருந்த பன்னாட்டுச்சிறார்களை ஆரத்தழுவி அரண ...
POST: 2014-02-03T14:39:09+05:30
Teaching Philosophy is the primary education for the Tamils. ஆரம்ப வயதிலேயே A for Apple B for Bat என்பதற்கு பதிலாக அறஞ்செய விரும்பு, ஆறுவது சினம் என்று கூறுவது தமிழர்களின் அற சிந்தனையைக் காட்டும் என்பார்கள். அறம் என்ற சொல் நீதி, நேர்மை, ஓழுக்கம் என்று ப ...
POST: 2014-02-02T22:30:11+05:30
தமிழ் மொழிக்கு அறநூல்களால் பெருமை உண்டு. நீதி இலக்கியங்கள் என்ற தலைப்பிலேயே அறிஞர் க.த.திருநாவுக்கரசு அவர்கள் தனது ஆய்வேட்டை வழங்கி சென்னைப் பல்கலைக்கழகம் அதை வெளியிட்டுள்ளது. நீதி இலக்கியங்களின் காலம் என்றே பதினெண்கீழ்க்கணக்கு காலத்தைக் குறிப்பிடலாம்.
POST: 2014-02-01T11:23:04+05:30
நேற்று ஓர் அறிஞர் சொன்னார்: மொட்டை மாயவரம்,செட்டி சிதம்பரம்,பார்ப்பன பஞ்சநதம்,பறை திருவிடமருதூர் இந்த வழக்காற்றுக்கு என்ன பொருளோ?
