தென் குமரியிலா,மதுரையிலா,மயிலாப்பூரிலா என்று எங்கே பிறந்தார் என்று எவராலும் முடிவு கட்டமுடியவில்லை;இந்த அழகில் தமிழ் நூல் என்ற அளவில் விட்டால் போதும்,பகவன் முதற்றே உலகம் என்பது பகவத்கீதையைக் குறிக்கிறது என்று எவரும் வாதிட முடியவில்லை.தில்லி மேலவையில் வாதம் நடந்தபோது திரு தருண் விஜய் ஏனோ இடம் பெறவில்லை? விளையாட்டுக்கு தமிழர் கண்ணில் சந்தனத்தூளைத் தூவினால் போதும் என்று தில்லியில் நினைத்தார்கள்.இனி ஆறு திங்களுக்கு திருக்குறள் தேசிய நூல்,தமிழ் ஆட்சி மொழி என்ற ஆரவாரங்கள் இடம்பெறாது.செயத்தக்க அல்ல செய்யக்கெடும் என்ற அருங்குறளுக்கு இதுதான் பொருள்.திருக்குறளை மொழிபெயர்க்க போவதாக சொல்லியிருக்கிறார்கள் மத்திய அரசினர்,எந்த மொழியில் இதுவரை மொழிபெயர்க்கவில்லை என்ற விவரம் தெரிந்தால் உண்மை ஊர்க்குத்தெரியும்?
வடமொழியில் திருக்குறள் எழுதப்பட்டு அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது என்று பொருள்படும்படி ஓர் வடமொழி அறிஞர் எழுதியதும் அறிஞர் மு அருணாசலம் அவர்கள் அதற்கு மறுப்புரை எழுதியதும் ஆளுநர் கே கே ஷா ஆட்சிக்காலத்தில் நடந்தது,எவருக்கும் நினைவிருக்காது என்று நம்பலாம்

Add a Comment