POST: 2015-01-24T11:36:10+05:30

மும்பையில் நடந்த 102வது அறிவியல் மாநாடு இராகு காலத்தில் தொடங்கியதோ என்று தெரியவில்லை,இராவணன்,சீவகன் முதலியோர் செலுத்திய விமானங்களுக்கு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கிறது.

சாணத்திலிருந்து தங்கம் செய்யலாம் என்ற கருத்திற்கு ஆயர்பாடியில் பெரிய ஆதரவு அமைந்திருக்கிறது.

அண்ணாநகரிலிருந்து பள்ளம் தோண்டினால் பாதாள லோகத்திற்கு சென்று அமெரிக்காவிற்கே போகலாம் என்ற ஒரு குறிப்பு ஓலைச்சுவடியில் இருக்கிறதாம்.

அடுத்த மாநாட்டை வைத்தீசுவரன் கோயிலில் நடத்தினால் நாடிசோதிட உண்மைகளை நாசாக்காரர்கள் கேட்டு வியப்படைவார்கள்.

2015 அதிசய ஆண்டாக இருக்குப்போகிறது!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *