அகராதி பேரறிஞர் சாமூவேல் ஜான்சன்,
எழுத்துத்திலகம் ஆலிவர் கோல்ட்ஸ்மித்,
நடிப்புச்சுடர் டேவிட் கார்ரிக்
-மூன்று பேரும் தான் இணைப்பிரியாமல் இருந்த இலக்கிய மூவர்.அதுப்போல திராவிட இயக்கம் வேர் விடுவதற்கு
பேரறிஞர் அண்ணா,
சிரிப்புச் சிந்தனையாளர் சீ வீ ராஜகோபால்
நடிப்பிசைப்புலவர் கே ஆர் ஆர்
ஆகிய மூவரையும் குறிப்பிடவேண்டும்.
நாடகயுலகத்தில் அண்ணா அவர்கள் பங்கேற்ற போதே அவரைத் ஆரத்தழுவி நான் எப்போதும் உங்களுக்கு தூண்,நீங்கள் இட்ட ஏவலை செய்வேன் என்று அண்ணாவை ஒப்பில்லாத அறிஞராக மாற்றிய சிறப்பு நடிப்பிசைப்புலவர்க்கு உண்டு. கழகத்திற்காக தன்னை இழந்தவர்;பொருளை இழந்தவர் கே ஆர் ஆர்.
அண்ணா சொர்கவாசல் எழுதியது ஆர் ராமசாமிக்கே!
கே ஆர் ஆர் தான் மான் பிடிக்கப் போனால் மந்தையையே ஒட்டி வருவார் என்று ஒரு முறை அண்ணா சொன்னார்.அது வேறு ஒரு பொருளில் கூறியது;ஆனால் கழகத்திற்கு நடிகர் திலகம் சிவாஜியிலிருந்து நடிகர் படை கொண்டு வந்தது கே ஆர் ஆர் தான்
இந்த வாளே! வழக்கு மன்றம்
இந்த கையே சட்டம்!
கத்தியைத்தீட்டாதே!புத்தியைத்தீட்டு!
ஏழைகளின் கண்ணீர்-இது எளியோர்களின் வியர்வை ;ஏமாளிகளின் இரத்தம், பராசக்தி! பன்னிரண்டு கண்கள் உனக்கு இருக்கிறதாமே உன் கண் இரண்டும் இதை காண முடியாதா?
என்று அம்மன் கோயில்களில் ஆர்ப்பரித்தது கே ஆர் ஆர் ன்
1940களில் நாடகங்களில் வசனங்களாக ஒலித்தது

Add a Comment