POST: 2015-01-30T09:50:28+05:30

மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்று குறளில் இல்லை!

பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்

தமிழ் மக்களின் மாபெரும் கருவூலமாகக் காலமும் ஞாலமும் கைதொழுது போற்றுகிற சிறப்பு திருக்குறளின் தனிச்சிறப்பாகும்.

திருக்குறளுக்கு எத்தனையோ பெயர்கள் உண்டு. இருந்தாலும் கூட திருவள்ளுவம் அல்லது வாழ்க்கை விளக்கம் என்றுதான் அறிஞர் மு.வ. தன்னுடைய நூலுக்குப் பெயரிட்டிருக்கிறார்.

இந்திய நாட்டின் நிதியமைச்சரான சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் திருக்குறளுக்கு வாழ்க்கைத் துணை நூல் என்ற பெயரைத் தந்தார்.

திருக்குறளில் இல்லாத பொருள் இல்லை; எல்லாப் பொருளும் இதன்பால் உள என்பதன் நோக்கம் என்னவென்று சொன்னால்
ஒரு குழந்தையாக,
ஒரு இளைஞனாக,
போர்வீரனாக,
படைத்தலைவனாக,
திருமணம் செய்துகொண்டு வாழ்கிற இல்லத்தாளனாக, அரசனாக,
அமைச்சனாக,
தூதுவனாக,
ஒற்றனாக
வாழ்க்கையில் வாழும்போது அவன் காணும்
இன்பம்
துன்பம்
களிப்பு,
காதல்,
வெற்றி
ஆகிய உள்ள உணர்ச்சிகளெல்லாம் பின்னிக் கிடக்கிற நூல் திருக்குறள் என்று சொல்லலாம்.

இதற்கு மேல் வாழ்வில் என்ன இருக்கிறது?

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *