மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்று குறளில் இல்லை! 2
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
மழலைப் பருவத்தில் பிறக்கிறான்
மானுடனாக வாழ்கிறான்.
மனைவி மக்களுடன் வாழ்கிறான்.
மன்னனுக்குச் சிறந்த குடிமகனாக இருக்கிறான்
என்று நினைப்பது போல வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் பொருத்தமாகத் திருக்குறள் இருப்பது நமக்கெல்லாம் பெருமை தருவது ஆகும் நீங்களே நினைத்துப் பாருங்கள்.
அரசனுக்குப் பிறகு யார் அரசனாக வருவது என்று இன்றுவரை உலகத்தில் பெரிய ஐயப்பாடு நேரவில்லை. அரசனின் மகன் தான் அரசனாக வருவான். அந்த பழக்கத்தின் விளைவாகத்தான் இப்போது ஆட்சியில் இருப்பவர்களின் மக்கள்கூட அந்தப் பெரும் தகுதிக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்கிறார்கள். எந்த இடத்திலாவாது திருக்குறளில் மன்னனுக்குப் பிறகு மகன் ஆளவேண்டும் என்ற குறிப்பு இருக்கிறதா பாருங்கள். இல்லை. ஆக, மன்னனைப் பற்றிச் சொல்லத் தெரிகிறதே தவிர மன்னனுடைய மகன் வருவான், மன்னனுடைய தலைமுறைதான் ஆளும் என்கிற கருத்து திருவள்ளுவருக்கு இல்லை.மகன் ஆளவேண்டும் என்ற குறிப்பு இருக்கிறதா பாருங்கள். இல்லை. ஆக, மன்னனைப் பற்றிச் சொல்லத் தெரிகிறதே தவிர மன்னனுடைய மகன் வருவான், மன்னனுடைய தலைமுறைதான் ஆளும் என்கிற கருத்து திருவள்ளுவருக்கு இல்லை.

Add a Comment