விருந்தினர் பக்கம்
பாட்டுக்கொரு புலவன் பாரதியாரினுடைய 133-ஆவது பிறந்தநாளை நாம் சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அந்தவகையில் பாரதியைப் பெருமைபடுத்தும் விதமாக இன்று பாரதி மீதும் தமிழ் மீதும் பற்றுகொண்ட நபர்தான் இன்று நம்மிடையே வந்திருக்கிறார். ஆம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் வந்திருக்கிறார்.
வணக்கம்.
என் பார்வையில் பாரதி என்ற தலைப்பில் உங்களுடைய வரிகளைக் கேட்க ஆசையாய் உள்ளது.?
‘பொதுவாகவே கதிரவனைக் கைதொழுது பாடுவது’ என்பது பாரதியினுடைய ஒரு கவிதையினுடைய கருப்பொருளாகும். இளமை ததும்புகின்ற நீங்கள் இருவரும் பாரதியை நினைவுகூர்ந்து கேட்பது எனக்குப் பெருமிதமாக இருக்கிறது. நீங்கள் சொன்னதுபோல ‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ என்ற ஒரு தொடரே போதும் தேசிய மாகவி பாரதியின் பெருமையை எடுத்துச் சொல்வதற்கு.
இதிலேகூட ஒரு வேடிக்கை என்னவென்றால், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை என்பவர், நாகர்கோயில் பக்கத்தில் ‘குமரியில் இருந்து கூவிய குயில்’. மிக முதிர்ந்தவர். அதிர்ந்து பேசாதவர். அன்போடு குழைவாக எளிமையாகப் பாடல்களைப் பாடுகின்றவர். அவர் வாய் திறந்தால் வெண்பா தானாகவே பிறக்கும் என்று சொல்வார்கள். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எழுதிய பாடல்களையெல்லாம், நீங்கள் சொன்னபிறகு நினைத்துப்பார்த்தால்,
பாப்பா பாப்பா அருகில் வா
பாயுது பார் ஒரு பசுமாடு
என் அம்மா, என் குழந்தை
அதிர்ந்து பேசமாட்டார். தம்பி, தங்கை, அண்ணன், அக்காள் என்றுதான் அழைப்பார். என்னவோ ஆயிற்று அவருக்கு ஒரு நாள் அவருக்கு. பாரதியார் கவிதைகளைத் தொட்டிருக்கிறார் போலத் தெரிகிறது. பாரதியார் கவிதைகளைத் தொட்டாலேயே ஒரு மிடுக்கும் துடுக்கும் தானாகவே பிறக்கும்போலிருக்கிறது. அவர் யாரையும் அடா என்றே கூப்பிட மாட்டார். பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று எழுதினார். ‘பாட்டுக்கொரு புலவன் பாரதியடா!’ அவருக்கே ஒரு சந்தேகம் வந்துவிட்டது. நம்மபாட்டு இப்படி வராதே என்று. சரியென்று
அவன் பாட்டை ஒருவன் பண்ணோடு பாடினானேடா!
கேட்டுக் கிறுகிறுத்துப்போனேனேடா!
அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா!
எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால், அந்த பாரதியார் கவிதைகளையெல்லாம் சொல்லத் தொடங்கினாலேயே தன்னுடைய உடம்பில் ஒரு பெரிய முருக்கும், எஃகு நரம்பும் ஏர் கழுத்தும் ஏற்பட்டு ஒரு விடுதலை உணர்ச்சி பாட்டு பாடுகின்ற ஒரு ஆவேச பாடல்களின் தொகுதி என்று சொன்னால் மிகையாகாது. அதனால்தான் இதைக் குறிப்பிடுகிறேன்.

Add a Comment