POST: 2015-02-24T19:46:19+05:30

திருக்குறள் திறமும், திருவள்ளுவர் சிலையும்-3

பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்

இவ்வகையால் பரிமேலழகர் இம்முறையைக் கடைப்பிடித்து உண்மை உரை காண்பதில் வெற்றி பெற்றுள்ளார். எனினும், வேற்றுமொழி மரபும் தமிழ் மரபும் வேறு வேறு இயல்பின என உணர்த்தும். சில குறட்பாக்களில் இடர்ப்பட்டு அல்லற்படுகிறார். அவற்றை மறுப்பதும் உரைப்பதும் தமிழறிந்தார் தலைக்கடனாகும். அதுபற்றி அவரது உரை மாண்பும் அழகும் பெரிதாகக் குன்றுவதில்லை என்றே நாம் போற்றலாம்.

பெருந்தகை, அருந்தமிழ் உரைநடைக்கு அழகு சேர்த்த பெருந்தகை ஆறுமுக நாவலர் பதிப்பிலும் உரைநலத்திலும் இந்நலங்களெல்லாம் மலிந்து கிடப்பதைக் கண்டு மகிழலாம். இன்றும் நாவலர் பதிப்பு நலங்கெழுமிய பதிப்பாக ஒளிர்கிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *