தமிழ் நாட்டின் சார்பில் வெளி நாடுகளுக்கு எத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டாலும்,அவ்வாணை மூவேந்தருடைய வில், கயல், புலி என்னும் மூன்று அடையாளங்களும் சேரப் பொறிக்கப்பெற்றுச் செல்வது வழக்கம். தமிழ் வேந்தர் மூவரும் தமிழகத்தின் நலங்குறித்து ஒன்-றுகூடி அரசவையில் வீற்றிருந்து முறை செய்தலும் உண்டு, இத்தகைய ஒற்றுமைத் தோற்றம், தமிழ் மக்களுடைய உள்ளத்திற்க அளவில்லாத மகிழ்ச்சியை விளைவித்தது.

Add a Comment