POST: 2015-04-28T08:42:42+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்

மனிதனுடைய பழக்க வழக்கங்கள், உணர்வெழுச்சிகளின் ஒவ்வொரு பான்மையையும் ஊடுருவிப் பார்க்க வல்லவர் என்பதனால் சேக்ஸ்பியர் உலக மதமேதைகளிலெல்லாம் தலைசிறந்து விளங்குகிறார். அவர் தன்னுடைய நாடகங்களில் சற்றேறத்தாழ ஒரு மில்லியன் சொற்களைப் பொதிந்து வைத்துள்ளார். அவற்றுள் 27870 சொற்கள் வெவ்வாறானவை; வரலாற்றிலேயே மிகச் சிறந்த சொல்லாளுமைத் திறன். எண்ணிக்கையில் மிகுந்த அவர் அறிந்திருந்த சொற்றாகுதி இயல்கடந்த திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு! கி.பி.1623 ஆம் ஆண்டு வரையிலும் ஆங்கில மொழிக்குக் கிடைத்திருந்த சொல்வளத்தின் நாற்பது விழுக்காடு எனில் மிகையாகாது. இத்தனைக்கும் அவர் அத்தனை சொற்களை அறிந்திருந்தமைக்கு உதவும் வகையில் அகராதி ஒன்று கூட அவரிடம் இருந்ததில்லை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *