பாலியல், வன்முறை, வலுவந்தம், ஒழுக்கச்சிதைவு, கோணல் மாணல்கள் இவைபோன்ற பொருண்மைகள் பெரும்பாலும் 1950-க்கு முன்னால் கதைகளில், கட்டுரைகளில் தெளிக்கப்படுவதில்லை. ஆனால் பின்னால் வந்த எழுத்தாளர்கள் இவைகளை பூசிக்காட்டுவதன் மூலமே புகழடைந்ததாக நினைத்துக்கொண்டார்கள். இது காலத்தின் கோலம். இப்படித் தேரோட்டத்தை மூலை முடுக்கெல்லாம் இழுக்கச்செய்து ஒரு புதுச் சறுக்கல்களுக்குக் கால்கோல் இட்டவர் திரு. ஜெயகாந்தன் அவர்கள் ஆவார். புதுமைப்பித்தனே இந்தப் போக்குக்கு முதலில் கொஞ்சம் இடந்தந்தார். இப்போது இரத்தமின்றி, யுத்தமின்றி துகிலுரியாமல் துச்சாதனர்கள் எழுதாமல் இருப்பதில்லை. இப்படி ஒரு கருத்தை ஆங்கிலக் கட்டுரையில் எழுதியதற்கு எவரும் பதில் சொல்லவில்லையே !

Add a Comment