அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-1
என்னை நானே சேக்ஸ்பியர் வயத்தன் என்று சொல்லிக்கொள்வதுண்டு. (வயத்தன் என்கிற தமிழ்ச்சொல்லை Shakespearaholic என்கிற ஆங்கிலச் சொல்லின் aholic என்கிற அசைக்கு இணையானதாகக் கொண்டால்) ஒருவிதத்தில் நானும் வின்சென்ட் சர்ச்சிலைப் போன்றவன் தான். அவர் நேர்மையான பெருமிதத்துடன் ஒருமுறை குறிப்பிட்டார், பிள்ளைப் பருவத்திலிருந்து ‘உண்டியலில் சில்லரைகளைச் சேர்ப்பதைப் போல’ சேக்ஸ்பியரின் சொற்றொடர்களைத் திரட்டித்தான் ஆங்கிலப்புலமை பெற்றதாக! சற்றேறத்தாழ எனக்கும் அது பொருந்தும். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு எடுத்துக்காட்டு…..

Add a Comment