அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-2
சென்னை கடற்கரைச் சாலையில் ஆங்கிலேய அறிவியல் மேதை சி.எஃப். பாவெல்லுடன் நானும் எனது நெருங்கிய உறவினரும் (uncle என்கிற ஆங்கிலச் சொல் சித்தப்பாவையும் மாமாவையும் குறிக்கும் என்பதால் தமிழாக்கத்தில் நெருங்கிய உறவினர் இடம்பிடித்துக் கொண்டார்) பயணித்துக் கொண்டிருந்தோம். அவருக்கு அப்பொழுது தான் மேஸான் அணுவியற் கூறைப் பிரித்தெடுப்பது தொடர்பான ஆய்விற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. விண்வெளியில் மேஸானின் இருப்பினை ஆய்ந்தறிந்து அது தொடர்பான கோட்பாடுகளை வகுத்தமைக்காக ஜப்பானிய இயற்பியல் மேதை ஹிடேகி யுகாவாவிற்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. உரையாடலின் போது தற்செயலாக என்னை ‘சேக்ஸ்பியர் அடிமை என்று எனது உறவுக்காரர் குறிப்பிட்டார். பாவெல்லின் கண்கள் உடனே பளிச்சிட்டன.

Add a Comment