POST: 2015-06-08T08:11:15+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-8

2012ஆம் ஆண்டு இலண“டன“ ஒலிம்பிக் போட்டிகளைக் கொண்டாடும் விதத்தில் புகழ்வாய்ந்த பன்னாட்டு இதழ்கள் பல சிறப்பு வெளியீடுகளைக் கொணர்ந்தன. நியூட்டன், டார்வின், சர்ச்சில் ஆகியோரைப் பற்றிய குறிப்பெதுவும் அங்கே காணப்படவில்லை. இங்கிலாந்தினுடைய மாண்புமிகு மைந்தனான சேக்ஸ்பியருக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பாக இலண்டன் அதனைப் பற்றிக் கொண்டுவிட்டதாகவே தோன்றி யது. பிரிட்டன் தனது வரலாற்றின் மாண்பமைந்த காலக்கட்டத்தின்போது இங்கிலாந்தின் அறிவாற்றலின் ஒப்பில்லா மரபுவழி வைப்பாக உலகுக் காட்டுவதற்குத் தனித்தகைமை வாய்ந்தவராக, நியூட்டனோ, டார்வினோ, சர்ச்சிலோ அல்லது வேறு எவருமோ அல்ல, சேக்ஸ்பியர் மட்டுமே விளங்கினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *