அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-11
ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனையும், நீல்ஸ் போர், வெர்னெர் ஹெய்சென்பர்க், பால் டைராக் போன்றோரையும் கூட வியந்து போற்றியதுண்டு. ஹெய்சென்பெர்க்கினுடைய ‘உறுதியற்றதன்மை கோட்பாட்டைப் படிக்கும் பொழுது அல்லது டைராக்கினுடைய சமன்பாட்டைப் புரிந்து கொள்ளும் பொழுது ஒருவித குதூகலத்தில் ஆழ்ந்திருக்கிறேன். ஆனால், அதனை, ஹேம்லெட் நாடகத்தில் ‘இருப்பதா? மரிப்பதா?’ அல்லது, லியர் மன்னனுடைய ‘அன்பார்ந்த இயற்கையே, கேள்! பாசமிகு தேவதையே கேள்’ போன்றவற்றைப் படிக்கும் போது ஏற்படுகின்ற மயிர்க்கூச்செரியச் செய்யும் அனுபவத்துடன் ஒப்பிட முடியாது.

Add a Comment