POST: 2015-07-10T09:18:38+05:30

இந்தியப் பண்பாடு-8

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை

‘‘இது ஒரு வியப்பான சொற்பொழிவு. எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஆட்சி செய்த வெள்ளையன் என்ற பிரிட்டன் வழிமுறையைச் சார்ந்தவன் நான். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு உங்களை ஆட்சி செய்த இனத்தைச் சார்ந்தவர் அபுல்கலாம் ஆசாத். அந்நிய ஆட்சியில் சிறைக்கொடுமையில் யார் மிகவும் அவதிப்பட்டாரோ அவர்தான் முதல் சொற்பொழிவை நிகழ்த்தியிருக்கிறார். இப்போது ஆங்கிலேயனாகிய என்னை இங்கு அழைத்திருக்கிறீர்கள். இதைப்பார்த்தால், ஆள்கிறவன், ஆளப்படுகிறவன், ஓர் இனத்தைச் சார்ந்தவன், மறு இனத்தைச் சார்ந்தவன் – ஒரு சமயத்தைச் சார்ந்தவர்கள், வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள் என்றெல்லாம் வேறுபாடு காணாத பரந்த மனப்பண்பாடு இந்திய நாட்டில் ஆண்டாண்டுகளாக ஊறிவந்திருக்கிறது’’ என தாயன்பி தொடங்கினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *