POST: 2015-07-18T14:40:29+05:30

இந்தியப் பண்பாடு-15

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்

கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை

இதைத்தன் மனம் என்று கூறினார்கள்.
வாழ்வு என்பதற்குப் பொருள் வேண்டுமென்றால் எதிர்ச் சொல்லைச் சொல்லிப்பாருங்கள்!
வாழ்வுக்கு எதிர்ச்சொல் தாழ்வு என்பதாகும்.
நேற்றிலிருந்து ஒரு படி இன்று குறைந்தால் தாழ்வு என்று பொருள். நம்முடைய நினைப்பில் நேற்றிலிருந்து ஒரு படி தாழ்ந்து போனால் தாழ்வு என்று பொருள்.
அப்போது வாழ்வு என்றால் என்ன பொருள்?
நினைவினில் உயர்வதும் நேற்றைய வாழ்வைவிட மேம்படுவதும் என்றல்லவா பொருள். எனவே மேலும் மேலும் வளர்வது என்பது தான் வாழ்க்கையின் பொருளாகும்.
வாழ்க்கையில் தளர்வது, சோர்வது, வீழ்வது என்பது தான் தாழ்வு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *