POST: 2015-07-23T20:55:18+05:30

இந்தியப் பண்பாடு-17

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்

கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை

நவகாளியில் காந்தியடிகள் தங்கியிருந்தபோது,
‘’ நாளை இந்த வழியாகக் காந்தியடிகள் நடந்து போகும்போது கற்றாழை முட்களைப் பரப்பி வைக்கிறோம்’’
என்று சிலர் சொன்னார்கள். உடனே காந்தியடிகள் சொன்னாராம்

‘‘ நாளைக் காலையிலிருந்து காலணியில்லாமல் நடக்கப் போகிறேன்,’’ என்று.

பண்பாடு என்பது ஒருவரின் பகையைத் தூளாக்குவது என்பதோடு, பிறருக்கெனவே தன்னை இழப்பதாகவும் அமைந்துவிடுகிறது

. எனவே, வாழ்வு என்பது பிறர் நலத்தை வளர்த்துக் கொடுப்பது என்பதனையும் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் என்று சொல்கிற கருத்தினையும், சுதர்மம் என்று சொல்வதையும், கடமையை மேலும் மேலும் வளர்த்துக் கொள்வது என்ற வகையில் உள்ளுணர்வையும் அழகுபடக் குறித்திருப்பதை இந்தியப் பண்பாட்டில் காணமுடிகிறது.

இந்தப் பண்பாட்டைச் சொல்லளவுக்கு நாம் பேசமுடிகிறது. இலக்கிய அளவில் காணமுடிகிறது. வாழ்க்கையின் இயல்பில் ஒழுங்குகளை எப்படியெல்லாம் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள் என்று கூடக் காணலாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *