இந்தியப் பண்பாடு-20
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
…
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
பாரதத்தை எடுத்து நாம் பேசினாலும், இராமாயணத்தை எடுத்துச் சொன்னாலும் கூட வாழ்க்கையில் இராமனுடைய வழிமுறை சிறந்து திகழ்கிறது என்பதைக் காட்டுவதற்கு ஒருவன் ஒருத்தியே உயிரும் உடலுமாக அமைந்துள்ளார்கள் என்று சுட்டிக் காட்டுகின்ற வழக்கத்தை நாம் விடுவதில்லை. அதனால் பன்மனைவியர் வழக்கம் இந்திய நாட்டில் எங்கும் இல்லை என்று நான் சொல்லவரவில்லை. ஒருவனும் ஒருத்தியும் இணைந்து நின்றுதான் அறம் செய்யமுடியுமென்று காட்டும் பண்பாடு நெடுங்காலமாக நம்மிடையே இருந்து வந்திருக்கிறது. இது காதல் வாழ்க்கையில் மட்டுமல்ல; போர் வாழ்க்கையிலும் கூட ஒருவனும் ஒருவனும் எதிர்நின்று போரிடுவதென்ற வழக்கம் தான் பாராட்டத்தக்கதாக இருந்து வந்திருக்கிறது. எனவே முதுகில் குத்துவது போராளிகளுக்கு இழுக்காகும்.

Add a Comment