இந்தியப் பண்பாடு-24
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் துணைவேந்தர்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரைஇந்த நாட்டு மக்களுக்குச் சமயத்தின் பெயரால் ஒருமைப்பாட்டு
உணர்ச்சி எந்நாளும் இருந்திருக்கிறது. வேந்தர்கள் கூட இமயம்
வரை சென்று வந்தால்தான் தமக்குப் புகழ் என்று கருதினார்கள்.
அவ்வாறே இமயத்தில் உள்ளவர்கள் எல்லாம் கீழே குமரி வரை
வந்து போனால்தான் தங்கள் வழிபாட்டு நெறி முடிகிறது என்று
கருதினார்கள். மேலும் சமய உணர்வு இந்த நாட்டுக்கு
இயல்பாகவே இருந்திருக்கிறது. இயல்பாகவே இருந்தது என்பது
மட்டுமல்ல, எதற்கும் சமயத்தைத் தமது வாழ்க்கையில்
இணைத்துக்கொள்வதென்னும் வழக்கமும் இந்திய நாட்டில்தான்
உள்ளது. மற்ற நாட்டு மக்களுக்குச் சமய உணர்வு என்பது
ஆராய்ச்சிக்குரிய ஒரு பகுதிதான். அங்கே பாருங்கள்! மொழி
கற்றுக்கொடுக்கும்போது A for Apple, B for Ball, C for Cat என்றுதான்
கற்றுக்கொடுப்பார்கள். ஆனால், இங்கே கற்றுக்
கொடுக்கும்போதே அ. அறம் செய விரும்பு, ஆ. ஆறுவது சினம்.
இதைப்பார்த்து கால்டுவெல் எழுதினார். They teach philosophy even in the
primary classes என்று.

Add a Comment