இந்தியப் பண்பாடு-25
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் துணைவேந்தர்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
எழுத்திலக்கணத்தில்கூட முதலில் உயிரெழுத்து,
இதற்கு அடுத்த எழுத்துக்குப் பெயர் மெய்.
இது இரண்டும் சேர்ந்தால் உயிர்மெய்.
உயிர் என்பது தனியாக இயங்கும்.
மெய் என்பது சட்டையைப் போல் இருக்கும்.
இந்த உயிர், மெய்க்குள்ளே நுழையும்.
பிடிக்கவில்லையென்றால் போய்விடும்.
எழுத்துக்கு இப்படிப் பெயர் வைத்திருக்கிறார்களே!
உயிர், உயிர்மெய் என்றெல்லாம் தத்துவ அடிப்படைகள் அமைத்திருப்பதை அனைவரும் வியக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் `
இராமன் வருகிறான்` என்று சொன்னால் நிகழ்காலம்,
வந்தான் என்று சொன்னால் இறந்த காலம்,
வருவான் என்று சொன்னால் எதிர்காலம்.
எனவே இந்த வினைச்சொல் எப்படியாவது காலத்தைக் காட்டிவிடும். வந்தான், போனான், போவான் என்று காணலாம்.
இதை ஒரு நூற்பாவாக எப்படி எழுதியிருக்கிறார்கள் என்றால், ‘’
வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது, நினையுங் காலை காலமொடு தோன்றும்.’
’ இது வெறும் எழுத்திலக்கணமா? இதில் என்ன இருக்கிறது? எவ்வளவு பெரியவனாக இருந்தாலும்
எளியவனாக இருந்தாலும்
அவனை விடாமல் உரிய காலத்தில் வினை வளைத்துக்கொள்ளும். இது முதல் வகுப்பில் சொல்லிக்கொடுக்கும் பாடம்!
வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது; யாரிடத்திலும் அது வேற்றுமை பாராட்டாது; அரசனாகட்டும், ஆண்டியாகட்டும் வினைக்குத் தொழில் என்னவென்றால் உரிய காலத்தில் வந்து நிற்பதே.
வந்தான், வருகிறான் என்றால் அதில் காலக்குறிப்பு இருந்தே தீரும்.
இப்படிச் சின்னஞ்சிறிய இலக்கணத்தில் கூட வாழ்க்கையைப் பற்றிய உவமைகளை நாம் ஆழ்ந்து எண்ணியாக வேண்டும் என்ற ஒரு பண்பு நமது பண்பாட்டில் அடங்கியிருக்கிறது.
இது நல்லதா, கெடுதலா என்பது வேறு! ஆனால் வாழ்க்கையில் இந்தப் பண்பாடு ஊறியுள்ளது. கடமையைச் செய்வதைத் தடுப்பதற்கோ ஊக்கத்தோடு முயல்பவரைத் தடுப்பதற்கோ இந்தக் கருத்துக்கள் இந்திய நாட்டில் பயன்படுத்தப்படவில்லை.

Add a Comment