POST: 2015-08-04T16:56:03+05:30

இந்தியப் பண்பாடு-26
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் துணைவேந்தர்

கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை

ஆல்பிரட் சுவிட்சர் Albret Switzer போன்றவர்கள் எல்லாம் The Development of Indian Thought என்று எழுதியதில் வாழ்க்கை என்பதைப்பற்றி நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றவர்கள் இந்தியர்கள், எனவே வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் அவர்களுக்குச் செல்வம் தேடுவதிலோ, கடமையைத் தொடர்ந்து செய்வதிலோஆர்வம் இல்லை என்று எழுதி வைத்துள்ளார்கள்.

ஆனால், இந்திய நாட்டு மக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து பார்க்கும்போது, அவர்களுக்குக் கடமை செய்கிற ஊக்கமும், செல்வத்தைத் தேடும் முயற்சியும், கல்வியைத் தேடும் முயற்சியும் இருந்து வந்ததால்தான், ஒருபக்கத்தில் நம்பிக்கை இல்லை என்ற மனப்போக்கு இருந்தாலும் கூட, அதையும் மீறிச் சென்று உழைக்கலாம் என்ற கருத்தையும் வளர்த்திருக்கிறார்கள். ஊழையும் உப்பக்கம் காண்பர்
என்ற திருக்குறள் நாம் அனைவரும்அறிந்தது தானே!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *