இந்தியப் பண்பாடு-27
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் துணைவேந்தர்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
நண்பர்களே!
நான் ஒன்று சொல்லி முடிக்கலாமென்று நினைக்கிறேன். கல்வியில்,
வாழ்க்கையில்,
ஒழுகலாற்றில்,
நடைமுறையில்,
இல்லறத்தில்
என்று எல்லா வகையிலும் வாழ்க்கையைப் பற்றி வகையறிந்த நமது நாட்டில் துறவிகளைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள்.
நம்முடைய துறவு என்பது
மனைவியைத் துறந்து போவது அல்ல;
மக்களைத் துறந்து போவது அல்ல;
மக்களைத் துறந்து போவது புத்தருக்கு வேண்டுமென்றால் பொருத்தமாயிருக்கும்; நமக்கு அது பொருந்துவதில்லை. மனைவியை, மக்களை, அரசைத் துறப்பதல்ல துறவு!
ஒரு குறிக்கோளுக்காக எதையாவது ஒன்றைத் துறப்பது – கடைப்பிடிக்கவேண்டிய ஒரு ஒழுக்கத்திற்காகத் துறப்பது என்று கருதினார்கள்.
வங்காள நாட்டு இளைஞர்கள் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டபோது, நாட்டு விடுதலைக்குப் பிறகு தான் திருமணம் செய்துகொள்வது என்று நாற்பது பேர் சூளுரை எடுத்தார்களாம், அதனால்தான் அமைச்சர்கள் பலர் திருமணமாகாதவர்களாக அமைந்திருந்தார்கள் என்று கூறுவர்.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை`
என்பதற்கே ஒழுக்கத்துக்காக – ஒரு குறிக்கோளுக்காக நீத்தவர்கள் என்று பொருள்.

Add a Comment