இந்தியப் பண்பாடு-28
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் துணைவேந்தர்
கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை
தன்னுடைய அண்ணனுக்கு அரசு வரவேண்டுமென்பதற்காக நீத்த உறவு இளங்கோவடிகளின் துறவு!
ஒரு கொள்கைக்காக,
நாட்டுக்காக,
மொழிக்காக
எனக்குத் திருமணம் வேண்டாம் என்று மேற்கொள்வது துறவு.
எனவே இந்திய நாட்டுத் துறவு என்பது
ஒரு கருத்தை ஆழமாக வலியுறுத்தவும்,
ஒரு கொள்கையை விடாப்பிடியாகப் பரப்பவும்,
ஒரு நோக்கத்தை உலகத்திற்கெல்லாம் வழங்கவும் மேற்கொள்வது தானே
தவிரக் கோபித்துப் போவதோ,
குடும்பத்தைவிட்டுப் போவதோ,
குழந்தைகளை மறுப்பதோ
துறவு ஆகாது.
இப்படியெல்லாம் நாம் கணக்கெடுத்துப் பார்த்தால் ஒன்றை நினைவிற்கொள்ளலாம். கோயில்கள் எழுப்புவதில் மக்களுக்குப் பெரிய ஆர்வம் இருந்தது.
நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 48,000 கோயில்கள் உள்ளன. நான் சொல்வது ஏறத்தாழ அறநிலையத் துறையின் கணக்கு. எப்படி இந்தக் கணக்கு தெரிந்ததோ!
பாரதியார் பாடும்போது நாற்பதாயிரம் கோயிலிலே சொல்லுவேன் என்று பாடியிருக்கிறார்.

Add a Comment