POST: 2015-08-26T08:31:55+05:30

தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-7

‘‘பண்ணெல்லாம் பாடற்கியை பின்றேல் – கண்ணென்னாம்
கண்ணோட்ட மில்லாத கண்’’ (573)
என்னும் உவமை வாயிலாகத் தெருட்டினார்.
இசையொலியும் இயற்பாடலும் இசைந்து செல்வதே இசையாகும்.
`பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்` என்பது சுந்தரர் செந்தமிழ். திரியில் எரிசுடரைக் கண்ணாடிக் கூட்டில் பொருத்தும்போது, பேரொளி பிறக்குமாப்போல, சொற்கள் கலவாத ஒலியளவில் உறங்கும் இசைக்கட்டு, பாட்டில் அமையும்போது, சொற்றுணையாக நமக்கு நல்லின்பம் நல்குவதுடன் நினைவிலும் நிலைபெறும்.
இந்நிலையில், கருவியிசை மிடற்றிசையோடு பொருந்தும்போதே மேன்மையுறும். பொருள்படாச் சொற்களை மிழற்றும் மழலை இன்பம் இனிதெனக் காட்டவே குழல் இனிதென்றார், திருவள்ளுவர். குழலினும் பொருள் கவர்ந்த நல்லிசையே இனிது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *