தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-8
என்பதையும் நாம் அறிய வேண்டும். இது கருதியே `எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்` என்று திருவள்ளுவர் நல்லவை என்று இசைச் சங்கம் எனப் பொருள் வருமாறும் அறிவுறுத்தினார் போலும்.பழங்காலத்தில் பண்ணிசை, மக்கள் வாழ்வோடு ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதாக ஊறியமைந்ததை அகநானூற்றுப் பாடல் காட்டும்.
‘‘கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயவறு பனுவல்
தொல்லிசை நிறீய உரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணினுள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.’’
(அகம்) 352: 12-17.
என்பது அஞ்சி அத்தைமகள் நாகையார் பாடல்.
அன்றன்று புதுமையும், ஆரா மகிழ்வும் தந்து நன்றென்று நாளும் நினையும் களிப்புக்குரிய இல்வாழ்க்கையை நடத்தும் தலைவியொருத்தி, திருமணமாகிச் சில ஆண்டுகள் கழிந்த பின்னர், தன்னெஞ்சுகந்த காதலன் காட்டிய அன்பு, தலைநாள் அன்பினும் நாளும் வேளையும் தழைத்துச் செழிப்பதை உணர்த்தி இந்த உவமையை நாகையார் உரைத்தார்.

Add a Comment