ஏசுவுக்கு விசாரணை நடந்தது. யூதர்களின் தலைவன் என்று தன்னை உலகுக்கு கூறியதாக குற்றம் சாட்டினார்கள். ஆனால் பீட்டர் என்ன குற்றம் செய்தார்? என்றால் ஒரு குற்றமும் இல்லை. ஏசுவின் சீடர் என்பது தான் குற்றம்.
சிலுவையில் அவரை அறையும் முன் பீட்டர் என்ன வேண்டினார் என்றால் நெஞ்சம் கலங்கும். ஏசுவின் தலை மேலாகவும் கால் கீழாகவும் சிலுவையில் அறைந்தார்கள். பீட்டரையும் அவ்வாறே அறைய முயன்றார்கள். மன்றாடி கேட்டுக்கொண்டார்.
எங்ள் பெருமான் ஏசுவிற்கு இழுக்கு ஏற்படுத்தாதீர்கள். கால் மேலேயும், தலை கீழேயும் இருக்கும். சிலுவையில் அறையும்படி பீட்டர் கேட்டார். அப்படியே அறைந்து கொன்றார்கள்.
இதை கூறிய உடனேயே ஆப்பிரிக்கர்கள் துயரத்தை அடைக்க முடியாமல் விம்மி விம்மி அழுதார்கள் என்று
அறிஞர் முத்துலிங்கம் தன் புனைக்கதையில் உருக்கமாக எழுதியிருக்கிறார்.

Add a Comment