POST: 2015-09-14T12:58:09+05:30

வழக்கறிஞராக வாழ்வெல்லாம் கழித்தப்படி, என்றும் குன்றாத தமிழ் ஆர்வலராய் புதுவை கம்பன் கழகத்தை தன்னுடைய மற்றொரு மகன் போல வளர்த்தவர் புதுவை முருகேசன்.

ஆண்டு தவறாமல் கம்பன் கழகத்திற்கு என் தந்தையார் சென்று வந்ததோடு, என் தந்தையார் உடல் நலமில்லாமல்
இதயநோய்க்கு இரையாகி புதுவையில் இருந்தபோது தன் கண்ணைப்போல் பரிவு காட்டியவர் புதுவை முருகேசன்.

நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை! அவர் தோளில் சுமந்து வளர்த்த மேடை மன்னர்கள் எண்ணற்றவர்கள். என் கண் கலங்குகிறது.
புதுவை அப்பா எப்படி ஆறுதல் பெறுகிறாரோ? என் சிந்தை கவர்ந்த நண்பர் சிவக்கொழுந்து எப்படி மன உறுதி பெறுகிறாரோ என தெரியவில்லை.

ஒரு வாரத்திற்கு முன்னர் சென்னையில் இருந்து என் தந்தையிடம் பேசினார் இப்படியா வாழ்வு முடிவது ?

நந்தா விளக்கென நாயகனே !
இனி புரவலர்களை புரப்பதற்கு யார் உளரோ ?

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *