POST: 2015-09-21T16:15:15+05:30

தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-18

`யாப்பிலக்கத்தில் செய்யுட்களுக்குத் தளையால் ஏற்படும் ஓசையைச்
செப்பலோசை,
அகவலோசை,
துள்ளலோசை,
தூங்கலோசை
எனக்கூறினர்.
செப்பலோசை வெண்டளையால் உண்டாவது.
அகவலோசை ஆசிரியத் தளையால் அமைவது,
துள்ளலோசை கலித்தளையாலும், வெண்டளையோடு பொருந்திய கலித்தளையாலும் பல தளைகள் விரவியும் உருவாவது.
தூங்கலோசை ஒன்றிய வஞ்சித்தளையாலும் ஒன்றா வஞ்சித்தளையாலும், இவ்விரண்டு தளையும் விரவி வருவது.

இவை ஒவ்வொன்றும் மும்மூன்று வகையாக
ஏந்திசை,
தூங்கிசை,
ஒழுகிசையாகப்
பிரிக்கப்பட்டன.
‘‘பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழவையும்’’ என்று திருஞானசம்பந்தர், ‘‘இவ்வோசை கலந்த பாடல்கள் அரங்கேறும் தமிழவை’’ என்று கூறியது நினைக்கத்தக்கது.
இந்நால்வகை ஓசை கொண்ட செய்யுட்கள் இசைக்கு மிகப் பொருத்தமானவை எனலாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *