POST: 2015-10-15T09:40:10+05:30

25TH GRADUATION DAY SPEECH
on 05.07.2015
CHIEF GUEST’S SPEECH BY
THIRU.AVVAI NATARAJAN
Valliammal Women college,Annanagar-2

தற்போது எனக்கு என்ன கவலை என்றால் என்னுடைய மனைவியார் ஒரு பெரிய மருத்துவர். அவரும் ஒரு கல்லூரிக்கும் முதல்வராகவே மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் ஆக இருந்தவர்

எனக்கு ஒரு அதிர்ஷ்டக் குறைவு எனக்கு பிறந்த குழந்தைகள் மூன்று பேரும் ஆண் குழந்தைகள் ஆக பிறந்துவிட்டார்கள். ரொம்ப ஆசைப்பட்டேன். ஒரு பெண் குழந்தையாவது பிறக்காதா என்று. முதல் பையன் பிறந்துவிட்டு நான் காத்திருந்த பொழுது இரண்டாவது பெண் பிறக்கும் என்று எல்லாரும் சொன்னார்கள். போதாக்குறைக்கு ஜோதிடக்காரர்கள் பெண்தான் பிறக்கும் என்று சொன்னார்கள். நான் அந்த பெண் குழந்தைக்கு பெயர் கூட எழுதி வைத்து விட்டேன். அங்கே போய் பார்த்தால் ஆண் குழந்தை பிறந்தது. சரி என்று ஒரு சலிப்போடுதான் வந்தேன். அந்த பெயர்தான் அருள் என்று அந்த பையனுக்கு வைத்து விட்டேன்.

பிறகு ஒரு ஜோதிடர் சொன்னார், மூன்றாவது பிறக்கிற குழந்தை பெண்ணாகதான் பிறக்க போகிறது எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நானும் சரி என்று பார்த்தேன். மூன்றாவது குழந்தை பிறந்தது, அதுவும் ஆண் பையன். அதற்கப்புறம் அந்த முயற்சியை நான் விட்டுவிட்டேன்.
You should always to remember the father of girl children is the greatest fortune that can anybody enjoy. The affection, the affordability, the knowledge, the hard work and the sufficient love showers over the family are all rather inbuilt in the minds of the young women student.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *