25TH GRADUATION DAY SPEECH
ON
05.07.2015
CHIEF GUEST’S SPEECH
BY
THIRU.AVVAI NATARAJAN-3
மகளிராக இருக்கிற நீங்கள் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு பேர் படிக்கிற வாய்ப்பு வரவில்லை. ஆனால் இரண்டாயிரத்து பத்துக்குப் பிறகு அல்லது இன்னும் சொன்னால் இரண்டாயிரத்து ஐந்துக்குப் பிறகு மகளிர் இல்லாத துறையே இல்லை எனலாம். எல்லாத் துறையிலும் விண்வெளியிலே பறபதற்கும் மகளிர் வருகிறார்கள். வீட்டைக் காப்பது போலே நாட்டைக் காப்பதிலும் போர் திறனிலும் மகளிர் வருகிறார்கள். ஆட்சித் துறையிலும் வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய திறமையை அவ்வளவு அருமையாக வெளிப்படுத்துகிறார்கள்.
நான் இப்போது ஒரு செய்தி சொல்லப் போகிறேன். இதை நீங்கள் வெளியே யாரிடமும் போய் சொல்லக் கூடாது. என்னவென்றால், விஞ்ஞானிகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்து, ஆண்களை விட பெண்களின் மூளைக்குத்தான் திறமை அதிகம் என்று கூறியுள்ளார்கள். காரணம், ஊன்றிப் பார்க்கிற உற்றுப் பார்க்கிற உணர்ச்சி என்பது மக்களுக்கு பெறற்கரிய பெரும் பேராகும். கிரேக்கர்கள் எந்த சிலையை வடித்தாலும் அந்த சிலை எப்படி இருக்கும் என்று சொன்னால், திருவள்ளுவர் போல அமர்ந்து இருக்காது. கௌதம புத்தர் போல அமர்ந்து இருக்காது. நீங்கள் பார்க்கலாம் கிரேக்கத்துனுடைய சிலை நாடு பிடித்தபோது கூட நெற்றியில் கை வைத்துக்கொண்டு சிந்திப்பதுபோலதான் வடிப்பார்கள்.
The fatality of thinking which has created the human kind to the highest pedestal has been rather a very fortunately in the hopeful to the humanity therefore whatever the statue they created only the thinking faculty.
அப்படி சிந்திக்கிற வகையில் மாணவிகள், மாணவர்கள் என்று வேறுபாடு பார்க்கக் கூடாது என்பதுதான் காலத்தின் சூழல். ஒரு வேளை இங்கு இருக்கிற அறிஞர்களுக்கு தெரியுமோ தெரியோதோ குதிரை பந்தயம் நடக்கிறது பாருங்கள், அந்த குதிரை பந்தயத்தில், எந்த குதிரை வேகமாக ஓடுகிறது என்று பார்த்தால், அதைபோய் ஆண் குதிரை, பெண் குதிரை என்று கேட்கக்கூடாது.
It is rather usual in the case of பெண் குதிரை ஓடுகிறது என்று சொன்னால், அதனுடைய ஓட்டத்தை, ஆண் குதிரை வெல்ல முடியாது. ஆணா பெண்ணா என்று கேட்கிற கேள்வியே தவறு.
I hope your Principal may know that,
அமெரிக்க நாட்டிலும், நியூசுலாந்து நாட்டிலும் When you join for your higher study, when they give the application form, they will ask your vain, they will never ask your sex, they will never ask about your age எவ்வளவு வியப்பு பாருங்கள்.
நாம் எழுதும் போதே, பெயர், ஆணா, பெண்ணா எனவே நீங்கள் மகளிர் என்று நினைபதற்க்கு தனியாக ஒரு தனித்தன்மை இல்லை.

Add a Comment