உயர்கல்விக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகங்கள் தட்ச்சீலத்திலும், நாளந்தாவிலும் இருந்தனவாம். வேதங்களின் மூலமாக அனைத்துக் கலைகளும் கற்பிக்கப்பட்டனவாம். இந்தக் குறிப்பை அறிவியல் மேதை அப்துல் கலாம் எழுதியிருக்கிறார்.
ஐயோ! பாவம்! நேற்று வந்த செய்தியின்படி உலகத்தரம் வாய்ந்த பட்டியலில் 200 எண்ணினால், அதற்கும் கீழே இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றின் பெயராவது வரலாமாம். இந்த உயர்கல்வியில் பட்டம் பெறுகிறவர்கள் பல நாடுகளில் உயர்வாக இருக்கிறார்களாம். ஒருவேளை அங்கும் வேதங்கள் கற்பிக்கப்படுகின்றன போலும். இந்த உயர்கல்வி கற்றவர்கள் உத்திரப் பிரதேசத்தில் 2.22 இலட்சம் பொறியியில் பட்டம் பெற்றவர்கள் அரசின் ஏவலர் தொழிலுக்கு விண்ணப்பமிட்டு இருக்கிறார்கள். இந்த பாழும் கல்விக்கு என்ன பயன்?

Add a Comment