POST: 2015-11-15T10:12:55+05:30

சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-10
– பீட்டர் குயென்னெல்

அவர் புலன் உணர்வெழுச்சிக்கு ஆளாகக் கூடிவராகவும் மனச்சோர்வுடையவராகவும் வாழ்ந்தார் என்பது நிறுவத்தக்க உண்மை என்றில்லாவிட்டாலும் ஊகிக்கத்தக்க வாய்ப்பு உண்டு என்று கருதலாம்.

கற்பனை வளமிக்க மாபெரும் கலைப்படைப்புகள் பல ஒரு சில மறைந்திருக்கும் முரண்பாடுகளைத் தோற்றுவாயாகக் கொண்டவையாகத் தோற்றமளிக்கின்றன.

சேக்ஸ்பியருடைய அவலப் படைப்புகளின் ஆசிரியர் எளியவராகவோ, எதிலும் எளிதில் மனநிறைவு கொள்ளக் கூடியவராகவோ இருந்ததில்லை. இங்கே, ஏனைய கருத்தாக்கங்களில் கையாண்டதைப் போல ஊகங்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஆனால், அவருடைய பிள்ளைப் பருவம் அவருடைய தந்தையின் நீண்ட காலப் பொருளாதாரப் போராட்ட மேகங்களால் இருளடைந்திருந்தது என்பதிலும் அந்நிலை அவருடைய ஆர்வத்துடிப்பு மிக்க மகனுடைய உள்ளத்தில் தந்தையின் பால் ஈடுபாட்டுணர்வும் தனது இலக்குகளை எய்த இயலாமையின் மனத்துயரங்களும் கலந்த உணர்வு ஏற்படுத்தியது என்பதிலும் ஐயமில்லை.

நிகழ்வுப் போக்காக மற்றொன்றையும் கருத்திற் கொள்ள வேண்டும். அவருடைய தந்தை, தாய் இருவருடைய குடும்பப் பின்னணியில் அச்சுறுத்தத் தக்க சமூக முரண் நிலவியதை மறந்துவிடலாகாது.

ஜான் சேக்ஸ்பியர் மிக எளிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மேரி ஒப்பீட்டு முறையில் செல்வ வளமிக்க மேல்தட்டு ஆர்டென் மரபினர் வழித்தோன்றல்.
எவ்வகையிலேனும் அடிப்படை முரண் எழுந்தது.

சேக்ஸ்பியர் கூர்மைமிக்க பிளவுகள் கொண்ட இயல்பு பெற்றார். குதூகலமானவராகவும், நல்லியல்பாளராகவும், அனைவருடனும் கூடி இணைந்திருப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்தார்.

ஆனால், அவருடைய அவலச்சுவைமிக்க படைப்புகளிலும், சில இன்பியல் படைப்புகளிலும் கூட, தனிநபருடைய தனிமையின் கொடுமை உணர்வு மேலோங்குகிறது. அது தொடக்க காலப் படைப்பான ‘‘மூன்றாம் ரிச்சர்ட்” நாடகத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது.

அந்நாடகத்தில் ஒரு சமையம் சுய அன்பைத் தேடுகின்ற ஆவேசத்தாலும், மறு சமையம் வெறுப்புணர்வின் உச்சத்திலும் வதைக்கப்படுகின்ற கொடுங்கோலனைத் தீட்டியுள்ளார்:

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *